சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன சர்ச்சை ஏப்ரல் 17ம் திகதிக்கு பின்னர் விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் சசிகலா அணியினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையகம் முடக்கியுள்ளதுடன் அ.தி.மு.க. என்ற பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்த தடையும் விதித்துள்ளது.
இந்தநிலையில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் ஏபடரல் மாதம் விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஏப்ரல் மாதம் 17ம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதுடன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரி என்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு சசிகலா தரப்புக்கும் அறிவுறுத்தி உள்ளது.