Home இலங்கைதாம் குற்றமற்றவர் என்பதனை விமல் வீரவன்ச நீதிமன்றில் நிரூபிக்க வேண்டும் – விஜயதாச ராஜபக்ஸ

தாம் குற்றமற்றவர் என்பதனை விமல் வீரவன்ச நீதிமன்றில் நிரூபிக்க வேண்டும் – விஜயதாச ராஜபக்ஸ

by admin


தாம் குற்றமற்றவர் என்பதனை ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச நீதிமன்றில் நிரூபிக்க வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதற்கு முன்னதாக தாம் குற்றமற்றவர் என்பதனை விமல் வீருவன்ச நிரூபிக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் விமல் வீரவன்ச அரசியல் ரீதியாக பழிவாங்கப்படவில்லை எனவும், அவரின்  கைது முழுக்க முழுக்க நீதிமன்றினால் மேற்கொள்ளப்பட்ட  விடயம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது சட்டம் ஒழுங்கு அமைச்சரினால் விமல் வீரவன்ச கைது செய்யப்படவில்லை எனவும், காவல்துறையினரே அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் காவல்துறையினருக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவும் உத்தரவிடவும் அதிகாரம் கிடையாது என குறிப்பிட்டுள்ளதுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதனை தடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More