இலங்கையின் கிரிக்கட் வீரர் குசால் பெரேரா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். தசை பிடிப்பு உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் குசால் பெரேரா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை கொழும்பில் பங்களாதேஸ் அணியுடன் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது குசால் பெN;ரரா உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இடது தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாரியளவில் பாதிப்பு கிடையாது எனவும் அணியின் முகாமையாளர் அசாங்க குருசிங்க தெரிவித்துள்ளார். குசால் பெரேரா மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடக் கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
.