162
மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென முன்னாள் ராஜதந்திரியும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர படைவீரர்களை காட்டிக் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் கலப்பு நீதிமன்ற விசாரணையை ஒப்புக் கொண்டமை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவை இழிவுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய குற்றச் செயல்களில் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய மங்கள சமரவீர செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love