உலகம்

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர்கள் தங்கியிருந்த மறைவிடங்கள் மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் அல்கொய்தா முக்கிய தலைவர் குவாரி யாசின் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட குவாரி யாசின் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார் எனவும் கடந்த 2008-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் தாக்குதல் மேற்கொண்டு  2 அமெரிக்கர் உள்பட 50க்கும் மேற்பட்டோரை கொன்றதுடன்  2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply