உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் சீர்செய்யப்பட்டு அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், எதிர்வரும் வாரம் பாராளுமன்றில்; திருத்தங்களை சமர்பிப்பிக்க உள்ளதாகவும் அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 55 நாட்கள் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.