ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதுவரை காலமும் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடவுச்சீட்டையும் விடுவிக்குமாறு நீதிபதி விகும் களுவாரச்சி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து போலி ஆவணமொன்றை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டார் என குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையில் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு அத்தநாயக்க நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மகளை பார்வையிடுவதற்காக அவர் கோரியிருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.