192
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் 35 வயதான பெடரர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நடாலை எளிதில் வீழ்த்தி மியாமி ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் பெடரர் வென்ற 3-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெடரர் கிராண்ட் ஸ்லாமான அவுஸ்திரேலிய ஓபன், மற்றும் இன்டியன் வேல்ஸ் ஆகிய போட்டிகளில் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love