194
ரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களும் தாமும் ரஸ்யாவிற்கு தோள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love