229
களுத்துறை சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் சமயங் உள்ளிட்ட ஐந்து கைதிகளும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அல போலே எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love