166
சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை கொழும்பில் அமைக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயமொன்று கொழும்பில் அமைக்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித இணக்கப்பாடும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான காரியாலயமொன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு எதுவித அவசியமும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பாரியளவில் பிரச்சினைகள் காணப்படும் நிலையில் எமக்கு இப்போது சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை அமைப்பது முக்கியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love