ஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கில் இடம்பெற்று நடைபெறும் தொடர் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புகளை மேற்கொண்டு கலந்தரையாடவும் மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
1 comment
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் தொடர்பான கால அட்டவணைகளை உருவாக்க கடைசியாக தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது.
அவர்கள் அக்டோபர் 2015 இல் செய்திருக்க வேண்டும், தவறிவிட்டுள்ளனர். இனியாவது விரைவில் அட்டவணைகளை உருவாக்க வேண்டும்.
Comments are closed.