208
ஜே.ஓ.25 எனப் பெயரிடப்பட்ட விண்கல் பூமியை தாக்காது எனவும் எதிர்வரும் 19ம் திகதி குறித்த விண்கல் பூமியை கடந்து செல்லும் எனவும் நாசா அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜே.ஓ.25 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லானது 650 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய விண்கல் ஆகும். இது பூமி மீது மோதும் அபாயம் இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது அது பூமியை தாக்காது 18 லட்சம் கி.மீ. தூரத்திலேயே கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் சந்திரனை போன்று 2 மடங்கு பெரியது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love