163
கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் வீரர் கிறிஸ் லைன் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் மீளவும் கிறிஸ் லைனுக்கு உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது களத் தடுப்பில் ஈடுபட்டிருந்த போது உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த உபாதை காரணமாக இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் தொடர்ந்தும் பங்கேற்க முடியுமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிறிஸ் லைன் மூன்று தடவைகள் தோள்பட்டை உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love