ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளிங்கிரி மலையில் கட்டடங்களை கட்டியமை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் விதிமுறைகளை மீறி 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் தியான மண்டபங்கள், கார் தரிப்பிடம், பூங்கா போன்ற கட்டுமானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன எனவும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டும் எனவும் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.