எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கிற விதத்தில் இந்திய மத்திய அரசு தயாரித்த எச்.ஐ.வி. தடுப்பு, கட்டுப்பாடு மசோதா-2017 மசோதா நிறைவேறியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கிற விதத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு இந்த மசோதாவை தயாரித்திருந்தது.
இந்த மசோதாவுக்கு மேல்சபை கடந்த மாதம் 21ம் திகதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நேற்றையதினம் விவாதம் நடத்தப்பட்டது.
ஆதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜி ஒப்புதல் அளித்தவுடன் குறித்த மசோதா சட்டமாகி அமுலுக்கு வரும். இந்த சட்டத்தின்படி எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளிடம், யாரேனும் பாரபட்சமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது