173
இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Spread the love