Home விளையாட்டுநான்கு பந்துகளில் 92 ஓட்டங்களைக் கொடுத்த பந்து வீச்சாளர்

நான்கு பந்துகளில் 92 ஓட்டங்களைக் கொடுத்த பந்து வீச்சாளர்

by admin


பங்களாதேஸில் கழக மட்ட போட்டியொன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் நான்கு பந்துகளில் 92 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கிய அரிய சந்தர்ப்பமொன்று பதிவாகியுள்ளது. நான்கு சட்ட ரீதியான பந்துகளில் இவ்வாறு 92 ஓட்டங்களை குறித்த பந்து வீச்சாளர் எதிரணிக்கு வழங்கியுள்ளார். டாக்கா லீக் கழக மட்ட கிரிக்கட் போட்டித் தொடரில் லால்மாட்டியா கழகத்தின் சார்பில் விளையாடிய சோயுன் மமூட் (Sujon Mahmud ) என்ற வீரரே இவ்வாறு நான்கு பந்துகளில் 92 ஓட்டங்களை வாரி வழங்கியுள்ளார்.

இந்த சட்ட ரீதியான நான்கு பந்துகளுக்கு இடை நடுவில் 65 வைட்  பந்துகளும் 15 நோ போல்  பந்துகளையும் அவர் வீசியுள்ளார். லால்மாட்டியா கழகத்தினை எதிர்த்தாடிய Axiom Cricketers கழகம் ஒரு ஒவர் பூர்த்தியாகா நிலையில் 89 என்ற வெற்றி இலக்கை எட்டியுள்ளது. இதேவேளை, இந்தப் போட்டியில் நடுவர்கள் பிழையாக பக்கச்சார்பாக தீர்ப்பு வழங்கியதாக லால்மாட்டியா கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More