டெல்லியில் இன்று ஆரம்பமாகவிருந்த இந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக தெரிவித்து பாகிஸ்தான் அவருக்கு மரணதண்டனை விதித்துள்ளமையாலேயே இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குல்பூஷண் ஜாதவை உயிரோடு மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள இந்திய மத்திய அரசு அவரை தூக்கில் போட்டால், அது திட்டமிட்ட படுகொலையாக அமையும் என்று இதெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த இந்திய, பாகிஸ்தான் இரு தரப்பு கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்சினை, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.