Home விளையாட்டுசெல்சியா கழக தலைவர் இந்தப் பருவ காலத்துடன் கழகத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்

செல்சியா கழக தலைவர் இந்தப் பருவ காலத்துடன் கழகத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்

by admin

செல்சியா கழகத்தின் தலைவர் ஜோன் ரெரி இந்த பருவ காலத்துடன் கழகத்தை விட்டு விலகிக் கொள்ள உள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக ரெரி  செல்சியா கழகத்தின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1998ம் ஆண்டு முதல் இதுவரையில் 713 போட்டிகளில் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். இதில் 578 போட்டிகளில் செல்சியா கழகத்தை வழிநடத்திய பெருமை ரெரிக்கு உண்டு.

போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட விரும்புவதாகவும் செல்சியா கழகத்தில் தமக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கக்கூடிய சாத்தியம் குறைவாக காணப்படுகின்றது எனவும் இதனால் தாம் கழகத்தை விட்டு விலகுவதாகவும் ரெரி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More