152
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தொடர் இன்றையதினம் பிரஸ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் மதிப்பீட்டு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படட்டு அதன் பின்னர் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
எனினும், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் மே மாதம் முதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Spread the love