பிரித்தானியாவில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தமைக்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன. தேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணையானது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொது தேர்தல் முடிவை வரவேற்றுள்ள எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பன், பிரதமர் தெரீசா மே அடிக்கடி தனது மனதை மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.