அவுஸ்திரேலியா குடியுரிமை தொடர்பில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இதனைத் தெரிவித்துள்ளார். ஆங்கில மொழித்தேர்ச்சி மற்றும் அவுஸ்திரேலிய பெறுமதிகளை வெளிக்காட்டக்கூடியவர்களுக்கே இனி குடியுரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்முறை அடிப்படையிலான வீசா நடைமுறைகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரும் அனைத்து விண்ணப்பதாரிகளும் இந்த கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நலனை கருத்திற் கொண்டு இவ்வாறு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக பிரதமர் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.