சிவகொடியை ஏந்தியவாறு ஓம் நமச்சிவாய என உச்சரித்துகொண்டு சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்துள்ளார்.
ஓம் நமச்சிவாய என, உச்சரிக்ககூடாது எனவும் சிவகொடியை ஏந்திச்செல்லக் கூடாது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் நல்லூரிலிருந்து, சிறுவர்கள், பெண்கள் அடங்களாக 45 யாத்திரிகள் சிவனொளிபாத மலைக்கு கடந்த 22ஆம் திகதி சென்ற வேளையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்க்பபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.