212
கென்யாவில் இன்றையதினம் பேருந்து ஒன்றுடன் சமையல் எண்ணை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மோம்பாஸாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்ற நைரோபி-மோம்பாஸா தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையில் வேகமாக வந்த எண்ணை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 20 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love