Home விளையாட்டுறைன் லோற் (Ryan Lochte ) மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்

றைன் லோற் (Ryan Lochte ) மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்

by admin


றைன் லோற்   (Ryan Lochte) மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸில் ஒலிம்பிக் போட்டியின் போது றைனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக றைன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து றைனுக்கு ஒராண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் நடைபெற்ற நீச்சல் போட்டியொன்றில் பங்கேற்ற 32 வயதான  றைன்  100 யார்ட் பிரேஸ்ட்ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். றைன் ஆறு தடவைகள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More