ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி நகரான பேஸ்வாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களுக்கும் இடையில் இவ்வாறான மோதல்கள் இடம்பெறுவது மிகவும் அரிதானது என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் மோல்வி தாவுட் என்ற தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தலிபான் தலைவரை கொலை செய்தமைக்கான பொறுப்பினை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தாவுட் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்ததாகவும், சில நேரங்களில் பாகிஸ்தானுக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இயங்கவில்லை என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.