154
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார். யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் இன்றையதினம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஓர் அமைப்பை உருவாக்குவது தொடர்பில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து தெரிவிக்குமாறு கடந்த 70 நாட்களாக வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டோர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love