பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடி மிகுந்ததாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிற் விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரஸ்சல்ஸில் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறித்த விதிமுறைகளுக்கு 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே தெரேசா மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை என வரும் போது இது போன்ற நிலைமை ஏற்படும் எனவும் சில சமயங்களில் அது கடினமானதாகக்கூட அமையலாம் எனவும் தெரிவித்த அவர் பிரித்தானியாவின் பிரதமர் எனும் வகையில் பிரஜைகள் தொடர்பில் தனக்கும் அக்கறை உண்டு எனவும் அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரித்தானியர்களின் வதிவிட உத்தரவாதம் தொடர்பிலும் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் பிரித்தானியாவில் உள்ள ஒன்றிய பிரஜைகளுக்கு வதிவிட உத்தரவாதம் வழங்கக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும் என்பதும் தனது விருப்பங்களில் ஒன்று எனத் தெரிவித்த அவர் லிஸ்பன் விதியின் 50ஆவது சரத்தை செயலாக்குவது குறித்த கடிதத்திலும்; இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.