154
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர மலையேறு வீரர் யூலி ஸ்ரெக் ( Ueli Steck )விபத்தில் உயிரிழந்துள்ளார். நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் குறித்த வீரர் பலியாகியுள்ளார். யூலி என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய சரியான விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவரது மரணம் தொடர்பில் ஊகங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இறந்தவருக்கு அதுவே மரியாதையாக அமையும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
துரதிஸ்டவசமான ஓர் விபத்தினால் யூலி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகள் நடத்துவது குறித்து திட்டமிடவில்லை எனவும் நேபாள மலையேறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love