ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன தேர்தலில் ஒன்றாக போட்டியிடும் என பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளும் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் மூலம் தெளிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையே சுதந்திரக் கட்சி பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அநேக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.