விளையாட்டு

பிரித்தானியாவின் பாரா ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஓய்வு


பிரித்தானியாவின் பாரா ஓலிம்பிக் நீச்சல் வீராங்கனை சுசீ றோஜேர்ஸ்  (Susie Rodgers ) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக சுசீ றோஜேர்ஸ்  சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

பிரேஸில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில், 33 வயதான சுசீ றோஜேர்ஸ்     50 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 50 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ப்ரீ ஸ்டை நீச்சல் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெற்றுக்கொள்ள விரும்புவதாக அவர்    தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்கேற்கக் கிட்டியமை பெரும் உவகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply