158
கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணறு ஒன்றினை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்ட போதே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குண்டுகள் மீட்கப்பட்டமை குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்
Spread the love