தம்மை எவராலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். தமது பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தமது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரையில் தாம் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு காலி மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
காலி மாவட்ட மக்களே தம்மை பாராளுமன்றிற்கு தெரிவு செய்தனர் எனவும் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரேயொரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் தாம் மட்டுமே எனவும் அ வர் குறிப்பிட்டுள்ளார்.