210
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தொடர்பில் பாராளுமன்றிற்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பதனால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்படுவதாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பாராளுமன்றிற்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கீதா குமாரசிங்க தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love