சிங்கப்பூரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான வீட்டுப்பாடத்தை குறைத்து வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது தொடர்பான புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிங்கப்பூர் பாடசாலைகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்ற நிலையில் பரீட்சை மதிப்பெண்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையினை மாற்றி வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது; தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது மீளாய்வு செய்கிறது.
இதன் மூலம் மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும் எனவும் ஆரம்பப் பாடசாலைத் தேர்வுகளுக்காக மாணவர்கள் கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பபடும் நிலையும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.