164
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தாஜூடீன் கொலை வழக்கு விசாரணைகளின் போது, குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் நேற்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடீன் கொலை செய்யப்பட்ட காலப் பகுதியில், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் வாகன பதிவுப் புத்தகத்தின் சில பக்கங்கள் அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் தாஜூடின் கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love