இந்தியாவில் பீடி புகைக்கும் பழக்கத்தால் சுவாசப்பை கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் புகையிலை தொடர்பான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்களில் எண்ணிக்கையில் பீடி புகைப்பவர்கள் 9.2 சதவீதமாகவும், சிகரெட் பிடிப்பவர்கள் 5.7 சதவீதமாகவும் உள்ளனர்.
இந்தியாவில் புகையிலை பயன்பாட்டில் 70 முதல் 80 சதவீதம் பீடிகளை தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது எனவும் புகையிலை சார்ந்த பொருட்களின் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் பீடி புகைக்கும் பழக்கத்தால் மட்டும் சுவாசப்பை கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.