பிலிப்பைன்ஸ் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமார்ட் (Agnes Callamard ) பிலிப்பைன்ஸிற்கு திடீரென பயணம் செய்துள்ளார்.
இந்த பயணத்தின் போது கூட்டு கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரோட்றிகோ டூரேரெ ( Rodrigo Duterte ) பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆயிரக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக திட்டமிட்ட வகையில் பிலிப்பைன்ஸில் கொலைகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அக்னஸ் கொலமார்ட் பிலிப்பைன்ஸிற்கு பயணம் செய்யவிருந்த போதும் ஜனாதிபதி ரோட்றிகோ டூரேரெ விதித்த நிபந்தனை காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக