இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவின் மரண தண்டனை தொடர்பாக இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை மே மாதம் 15ம்திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜாதவ் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து இருப்பது குறித்து குல்புஷனின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.
உளவு பார்த்ததாக பாகிஸ்தான் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்; இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்புஷன் ஜாதவ்வுக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.