195
கிங் கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 7 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளதாகவும் அவர்களில் இரண்டு பேரை நீரலை இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழியோடிகளின் உதவியுடன் இவர்கள் தேடப்பட்டு வந்தநிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரும் காலி பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love