163
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமாண்ட டிஜிட்டல் வெசாக் பந்தலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார். ஐ.நா.வின் சர்வதேச வெசாக் பண்டிகை இம்முறை இலங்கையில் நடைபெறும் நிலையில், அதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர், பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்க குறித்த பந்தலை திறந்துவைத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love