இந்தியா

இணைப்பு2 – டிடிவி தினகரனின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மே 22ம் திகதிக்கு ஒத்திவைப்பு :

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், மல்லிகார்ஜூனன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் மே 22ம் திகதி  திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரட்டை இலைச் சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி காவல்துறையினரால் டிடிவி தினகரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு; திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்ததால் கடந்த 15ஆம் திகதி தினகரன் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை தொடர்ந்து தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு வருகிறது:-

May 18, 2017 @ 03:32

டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது குறித்த இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி காவல்துறையினரால் டிடிவி தினகரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு; திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்ததால் கடந்த 15ஆம் திகதி தினகரன் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை தொடர்ந்து தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply