இந்தியா

இணைப்பு2 – குல்பூஷனுக்கு பாகிஸ்தான் அளித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என  கண்டனம் வெளியிட்ட  சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று   தீர்ப்பு அளித்துள்ளது

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த  தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து  கடந்த 15ம்திகதி இது தொடர்பான  விசாரணை ஆரம்பமானது.  அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும்  பொய்யானது என இந்திய தரப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்றையதினம் சர்வதேச நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனை குறித்த  சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை

May 17, 2017 @ 14:06

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்  விதித்த மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த  தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து  கடந்த 15ம்திகதி இது தொடர்பான  விசாரணை ஆரம்பமானது.  அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும்  பொய்யானது என இந்திய தரப்பு தெரிவித்தது.  இந்தநிலையில்  நாளை வியாழக்கிழமை சர்வதேச நீதிமன்றம் இது தொடர்பில் தீர்ப்பு அளிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply