பிரான்ஸ் படையினர் தொடர்ந்தும் மாலியில் நிலை கொண்டிருப்பர் என பிரான்ஸ் ஜனாதிபதி மானுவல் மக்ரோன் (Emmanuel Macron ) தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்தும் இராணுவம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்திற்கான நாடாக மாலியை தெரிவு செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்ந்தும் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகளுக்கு ஜெர்மன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் மாலியில் தொடர்ந்தும் பிரான்ஸ் படையினர் நிலைகொண்டிருப்பர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.