கணிணிகளுக்குள் ஊடுவி தாக்குதல் மேற்கொள்ளும் வைரசான ரான்சம்வேர்-க்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இணையத்திருடர்கள் கணிணிகளுள் வைரஸ்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம் எனவும் இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாகவும் குறிப்பாக தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன் உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது மிகவும் கேலிக்குறியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.