ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதி அப்துல் ராசிட் டஸ்ரம் ( Abdul Rashid Dostum ) நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் போட்டியாளர்களை கடத்தவும், கொலை செய்யவும், பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தவும் துணை ஜனாதிபதி அப்துல் ராசிட் தனது அடியாட்களுக்கு உத்தரவிட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்துல் ராசிட் நாட்டை விட்டு வெளியேறி துருக்கிக்கு சென்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக துணை ஜனாதிபதி அப்துல் ராசிட் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.