சிரியாவில் மீளவும் தூதரகம் அமைப்பதற்கு திட்டம் எதுவும் கிடையாது என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ரோமன் நடால் ( Romain Nadal ) தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ( Emmanuel Macron ) தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தூதரகத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கிழக்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 2012ம் ஆண்டு சிரியாவிற்கான பிரான்ஸ் தூதரகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மீளவும் தூதரகத்தை அங்குரார்ப்பணம் செய்யும் திட்டமில்லை என பேச்சாளர் ரோமன் நடால் தெரிவித்துள்ளார்.