186
3
நாளை இடம்பெறவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த அமைப்பு இலங்கையில் முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
மேலும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு குறித்த அமைப்பு ஆதரவு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love