205
சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு நாட்டில் கடுமையான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடி மழை பெய்யக் கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சபரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love